RECENT NEWS

திருக்கோவிலூர் அருகே நியாயவிலைக் கடையில் முழு நீள கரும்புக்கு பதிலாக அரை அடி கரும்பு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு
தமிழக பட்ஜெட்டில் 27 மாவட்டங்களின் பெயர்கள் இல்லை : ஹெச்.ராஜா

தமிழக பட்ஜெட்டில் 27 மாவட்டங்களின் பெயர்கள் இல்லை : ஹெச்.ராஜா

Jul 28, 2024

472

செஞ்சி அருகே பாஜக சார்பில் நடத்தப்பட்ட பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா உரையாற்றினார்.மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் பெயர் இடம்பெறவில்லை என கூறிவரும் திமுக-வின் தமிழக பட்ஜெட்டில் 27 மாவட்டங்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என்றும் ஹெச்.ராஜா விமர்சித்தார்.

மத்திய அரசின் திட்டங்கள் புதிய பெயருடன் தமிழக பட்ஜெட்டில் அறிமுகம் : அண்ணாமலை

மத்திய அரசின் திட்டங்கள் புதிய பெயருடன் தமிழக பட்ஜெட்டில் அறிமுகம் : அண்ணாமலை

Feb 20, 2024

456

விளை நிலத்தில் ஊட்டச்சத்து தன்மையை ஆராய்வதற்காக மத்திய அரசு 2015 ஆம் ஆண்டு கொண்டு வந்த மண்வள அடையாள அட்டை திட்டத்தை பெயர் மாற்றம் செய்து, தமிழக அரசு வேளாண் பட்ஜெட்டில் அறிவித்துள்ளது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.தியாகராயநகரிலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பேட்டி அளித்த அவர், பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என்றார்.முன்னதாக நடைபெற்ற பாஜக ஊடகப் பிரிவின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

மத்திய அரசின் திட்டங்கள் புதிய பெயருடன் தமிழக பட்ஜெட்டில் அறிமுகம் : அண்ணாமலை

மத்திய அரசின் திட்டங்கள் புதிய பெயருடன் தமிழக பட்ஜெட்டில் அறிமுகம் : அண்ணாமலை

Feb 20, 2024

456

விளை நிலத்தில் ஊட்டச்சத்து தன்மையை ஆராய்வதற்காக மத்திய அரசு 2015 ஆம் ஆண்டு கொண்டு வந்த மண்வள அடையாள அட்டை திட்டத்தை பெயர் மாற்றம் செய்து, தமிழக அரசு வேளாண் பட்ஜெட்டில் அறிவித்துள்ளது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.தியாகராயநகரிலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பேட்டி அளித்த அவர், பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என்றார்.முன்னதாக நடைபெற்ற பாஜக ஊடகப் பிரிவின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தமிழக பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

தமிழக பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

Feb 19, 2024

629

தமிழக பட்ஜெட்டில் அதிகபட்சமாக கல்வித்துறைக்கு 52 ஆயிரத்து 254 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.நகர்ப்புற வளர்ச்சிக்கு 41 ஆயிரத்து 733 கோடி ரூபாயும், ஊரக வளர்ச்சிக்கு 27 ஆயிரத்து 922 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.எரிசக்தி துறைக்கு 22 ஆயிரத்து 310 கோடியும், மக்கள் நல்வாழ்வு துறைக்கு 20 ஆயிரத்து 198 கோடியும், நெடுஞ்சாலைகள் துறைக்கு 20 ஆயிரத்து 43 கோடியும், காவல்துறைக்கு 12 ஆயிரத்து 543 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.போக்குவரத்து துறைக்கு 9 ஆயிரத்து 787 கோடி ரூபாயும் நீர்வளத்துறைக்கு 8 ஆயிரத்து 398 கோடி ரூபாயும், தொழில் துறைக்கு 4481 கோடி ரூபாயும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் துறைக்கு 3706 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

தமிழக பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

Feb 19, 2024

629

தமிழக பட்ஜெட்டில் அதிகபட்சமாக கல்வித்துறைக்கு 52 ஆயிரத்து 254 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.நகர்ப்புற வளர்ச்சிக்கு 41 ஆயிரத்து 733 கோடி ரூபாயும், ஊரக வளர்ச்சிக்கு 27 ஆயிரத்து 922 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.எரிசக்தி துறைக்கு 22 ஆயிரத்து 310 கோடியும், மக்கள் நல்வாழ்வு துறைக்கு 20 ஆயிரத்து 198 கோடியும், நெடுஞ்சாலைகள் துறைக்கு 20 ஆயிரத்து 43 கோடியும், காவல்துறைக்கு 12 ஆயிரத்து 543 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.போக்குவரத்து துறைக்கு 9 ஆயிரத்து 787 கோடி ரூபாயும் நீர்வளத்துறைக்கு 8 ஆயிரத்து 398 கோடி ரூபாயும், தொழில் துறைக்கு 4481 கோடி ரூபாயும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் துறைக்கு 3706 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல்

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல்

Feb 19, 2024

505

2024 - 2025ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது.நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமைவழிப் பயணம் மற்றும் தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் என்ற தலைப்புகளில் நிதிநிலை அறிக்கை இருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.இன்று பொது நிதி நிலை அறிக்கையும், நாளை வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படுகின்றன. 

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல்

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல்

Feb 19, 2024

505

2024 - 2025ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது.நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமைவழிப் பயணம் மற்றும் தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் என்ற தலைப்புகளில் நிதிநிலை அறிக்கை இருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.இன்று பொது நிதி நிலை அறிக்கையும், நாளை வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படுகின்றன. 

வரும் நிதியாண்டில் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் - பட்ஜெட்டில் அறிவிப்பு

வரும் நிதியாண்டில் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் - பட்ஜெட்டில் அறிவிப்பு

Mar 20, 2023

3430

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை திட்டம் குறித்து அறிவிப்புவரும் நிதியாண்டில் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும்பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்.15 முதல் மகளிருக்கான ரூ.1000 உரிமைத் தொகை திட்டம் அமல்குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்க, ரூ.7000 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாடு அரசின் 2023-2024ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல்

தமிழ்நாடு அரசின் 2023-2024ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல்

Mar 20, 2023

6025

தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறையை ரூ.62,000 கோடியிலிருந்து ரூ.30,000 கோடியாக குறைத்திருக்கிறோம்பொருளாதார வளர்ச்சி, சமூக பாதுகாப்பிற்கு, திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறதுமாநில அரசின் வரி வருவாய் 6.11%ஆக உயர்வுமாநில அரசின் வரி வருவாய் 2020-21ல் 5.58% குறைந்தது; மாநில அரசின் வரி வருவாய் கடந்த 2 ஆண்டில் 6.11%ஆக உயர்ந்துள்ளதுமொழிப்போர் தியாகிகளுக்கு சென்னையில் நினைவிடம்மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசன் ஆகியோருக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும்அம்பேத்கரின் படைப்புகளில் தமிழில் மொழிபெயர்ப்புஅண்ணல் அம்பேத்கரின் படைப்புகள் ரூ.5 கோடியில் தமிழில் மொழிபெயர்க்கப்படும்தமிழ் கணினி பன்னாட்டு மாநாடுதமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தி தமிழில் மென்பொருள் உருவாக்க நடவடிக்கை - நிதியமைச்சர்591 தமிழறிஞர்களுக்கு இலவச பயணத் திட்டம்தமிழறிஞர்கள் 591 பேர் இலவச பயணத் திட்டம் அமல்படுத்தப்படும்தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம்சோழப் பேரரசு புகழை உலகறிய செய்ய தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்படும்சோழப் பேரரசின் கலைப் பொருட்களை பாதுகாக்கும் வகையில் சோழர் அருங்காட்சியகம் அமைப்புதமிழக ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு ரூ.40 லட்சம் நிதிதமிழக ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்தால், அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி ரூ.20 லட்சத்திலிருந்து, ரூ.40 லட்சமாக உயர்வுஇலங்கை தமிழர் குடியிருப்பு கட்ட ரூ.223 கோடி ஒதுக்கீடுஇலங்கை தமிழர்களுக்கான குடியிருப்புகள் கட்ட ரூ.223 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்711 தொழிற்சாலைகளுக்கு மக்களைத் தேடி மருத்துவம் விரிவாக்கம்711 தொழில் நிறுவனங்களில் 8.35 லட்சம் தொழிலாளர்கள் அவர்களின் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் மக்களை தேடி மருத்துவம் விரிவாக்கம்குடிமைப்பணி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவித்தொகைஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க ரூ.10 கோடி ஒதுக்கீடுமுதன்மைத் தேர்வு எழுதுவோருக்கு மாதம் ரூ.25,000, முதல்நிலை தேர்வு எழுதுவோருக்கு மாதம் ரூ.7,500 உதவித்தொகைபுதிய பள்ளி கட்டிடங்களுக்காக ரூ.7000 கோடிரூ.7,000 கோடியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாடு திட்டம் மூலம் புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டப்படும்புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.1500 கோடிஅரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட ரூ.1500 கோடி ஒதுக்கீடுசென்னையில் உலகளாவிய விளையாட்டு மையம்சென்னையில் சர்வதேச தரத்திலான உலகளாவிய விளையாட்டு மையம் அமைக்கப்படும்அனைத்து சமூக பள்ளிகளும் ஒரேகுடையின் கீழ் கொண்டுவரப்படும்ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூக பள்ளிகள் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்படும்இந்து சமய அறநிலைத்துறை உட்பட பல்வேறு துறைகளின் கீழ் உள்ள பள்ளிகளும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டுவரப்படும்பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.40299 கோடி ஒதுக்கீடுபள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.40299 கோடி ஒதுக்கீடுகலைஞர் நூலகம் ஜூன் மாதம் திறப்புமதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகம் ஜூன் மாதம் வாசகர்களை வரவேற்கும் - நிதியமைச்சர்மதுரை கலைஞர் நூலகத்தில் 3.50 லட்சம் நூல்கள் தமிழ், ஆங்கிலத்தில் இடம்பெறும்நான் முதல்வன் திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடுதொழில்சார் பயிற்சி தரும் 'நான் முதல்வன்' திட்டம் மூலம் 12.70 லட்சம் மாணவர்களுக்கு தற்போது பயிற்சிதொழில் முன்னோடி திட்டம்: ரூ.1000 கோடி ஒதுக்கீடுஅண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் ரூ.1000 கோடி ஒதுக்கீடுஉயர்கல்வித்துறை - ரூ.6,967 கோடி ஒதுக்கீடுஉயர்கல்வித் துறைக்கு ரூ.6967 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்ரூ.25 கோடியில் நேரு விளையாட்டு அரங்கம் சீரமைப்புரூ.25 கோடியில் நவீன வசதியுடன் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கம் சீரமைப்புரூ.500 கோடியில் காலை உணவு திட்ட விரிவாக்கம்முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்ட விரிவாக்கத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு; 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்எஸ்சி, எஸ்டி துறைக்கு ரூ.3513 கோடி ஒதுக்கீடுஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு இந்த நிதி ஆண்டில் ரூ.3,513 கோடி ஒதுக்கீடுமாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்வுமாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1000லிருந்து ரூ.1500ஆக உயர்வுகடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.1500லிருந்து ரூ.2000ஆக அதிகரிப்புமாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டத்திற்கு ரூ.1444 கோடி ஒதுக்கீடுமாணவர்களுக்கு சைக்கிள் திட்டம் - ரூ.305 கோடி ஒதுக்கீடுமாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க ரூ.305 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்மாணவர்களுக்கு ரூ.1580 கோடியில் நலத்திட்டங்கள்BC, MBC, DNC மற்றும் சிறுபான்மை சமூக மாணவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்க ரூ.1580 கோடி ஒதுக்கீடுபுதுமைப்பெண் திட்டத்தால் மாணவிகள் சேர்க்கை அதிகரிப்புபுதுமைப்பெண் திட்டத்தின் மூலம் உயர்கல்வி பயிலும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகைரூ.1000 உதவித்தொகை திட்டம் மூலம், உயர்கல்வி பயிலும் மாணவிகளின் சேர்க்கை, 29 சதவீதம் அதிகரித்துள்ளதுமகளிர் சுய உதவிக்குழு-ரூ.30,000 கோடிகடந்தாண்டு மகளிர் உதவிக் குழுவுக்கு ரூ.24,212 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது; இந்தாண்டு ரூ.30ஆயிரம் கோடி கடன் வழங்க திட்டம்கடன் தள்ளுபடிக்கு ரூ.3993 கோடி ஒதுக்கீடுவிவசாய கடன் தள்ளுபடி ரூ.2391 கோடி; நகைக் கடன் தள்ளுபடி ரூ.1000 கோடி; சுயதவி குழு கடன் தள்ளுபடி ரூ.600 கோடி என மொத்தம் 3993 கோடி ஒதுக்கீடுரூ.434 கோடியில் வெள்ளத்தடுப்பு பணிகள்சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ரூ.434 கோடியில் வெள்ளத் தணிப்பு தடுப்பு பணிகள் முடியும் தருவாயில் உள்ளதுதெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ரூ.10 கோடிதெரு நாய் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விலங்குகள் நல வாரியம் மூலம் 10 கோடி ஒதுக்கீட்டில் இன விருத்தி கட்டுப்பாட்டு மையம்தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்ஈரோடு கோபியில் புதிய வனவிலங்கு சரணாலயம்அழிந்து வரும் உயிரினங்களை காக்க, தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும். இது 18ஆவது வனவிலங்கு சரணாலயமாகும்ஈரோடு மாவட்டம் அந்தியூர், கோபியில் 80,000 ஹெக்டேர் வனப்பரப்பில், தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும்பறவை ஆராய்ச்சி-ரூ.25 கோடியில் புதிய மையம்பறவை பாதுகாப்பு, பறவை குறித்த ஆராய்ச்சிக்காக மரக்காணத்தில் ரூ.25 கோடியில் பன்னாட்டு பறவைகள் மையம்ரூ.2000 கோடியில் 5145 கி.மீ. கிராம சாலைகள்முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், ரூ.2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5145 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் அமைக்க திட்டம்அம்ரூத் 3.0 திட்டத்திற்க்கு கூடுதலாக ரூ.612 கோடிஅம்ருத் 3.0 திட்டம் மூலம் குடிநீர் சீரமைப்பு , நீர்நிலை புதுப்பிப்பு, பசுமையான நகர்புறப் பகுதிகள் உருவாக்கம்9ஆயிரத்து 378 கோடியில் ஏற்கனவே ஒப்புதல்; தற்போது ரூ.612 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர்கோயம்புத்தூரில் ரூ.175 கோடியில் செம்மொழி பூங்காகோயம்புத்தூரில் ரூ.175 கோடி மதிப்பீட்டில், 2 கட்டங்களாக செம்மொழி பூங்கா அமைக்கப்படும்முதற்கட்டமாக 45 ஏக்கரில் தாவரவியல் பூங்காவுடன் ரூ.172 கோடியில் கோவை செம்மொழி பூங்கா பணிகள் தொடங்கும்ரூ.1500 கோடியில் அடையாறு, கூவம் சீரமைப்புரூ.1500 கோடி மதிப்பீட்டில், 44 கி.மீ தூர அளவிற்கு அடையாறு, கூவம் ஆறுகள் சீரமைப்பு, பூங்காக்கள் உள்ளிட்டவை அமைக்கப்படும்சென்னையில் ரூ.430 கோடியில் கழிவறை மேம்பாடுசென்னை பெருநகரில் தனியார் பங்களிப்புடன் கழிவறைகள் கட்டவும், மேம்படுத்தவும் ரூ.430 கோடி ஒதுக்கீடுபிற மாவட்டங்களுக்கும் கழிவறை மேம்பாட்டுத்திட்டம்சென்னையில் மேம்படுத்தப்படும் கழிவறை சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம், பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்சென்னை தீவுத்திடலில் திறந்தவெளி தியேட்டர்சென்னை தீவுத்திடலில், 30 ஏக்கர் பரப்பளவில், பொழுதுப்போக்கு சதுக்கம், மற்றும் திறந்தவெளி திரையரங்கம் ரூ.50 கோடியில் அமைக்கப்படும் ரூ.1000 கோடியில் வடசென்னை வளர்ச்சித்திட்டம்வட சென்னையில் வளர்ச்சி திட்டம் 1000 கோடியில் செயல்படுத்தப்படும்தேனாம்பேட்டை-சைதை வரை 4 வழி மேம்பாலம்சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையில், ரூ.621 கோடியில் 4 வழித்தட மேம்பாலம் கட்டப்படும்ரூ.1200 கோடியில் பேருந்து பணிமனை மேம்பாடுசென்னையில் வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடி பேருந்து பணிமனைகள் ரூ.1200 கோடியில் மேம்படுத்தப்படும்ரூ.500 கோடியில் 1000 புதிய பேருந்துகள்1000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய ரூ.500 கோடி ஒதுக்கீடு; 500 பழைய பேருந்துகள் சீரமைக்கப்படும்புதிய ரயில் திட்டம் - ரூ.8056 கோடி ஒதுக்கீடுஇரயில்வே போக்குவரத்து பங்களிப்பை உயர்த்த மத்திய அரசுடன் பேசி புதிய ரயில் திட்டம் செயல்படுத்த டிட்கோ மூலம் ரூ.8056 கோடியில் சிறப்பு நிறுவனம்ரூ.17,500 கோடியில் கோவை, மதுரை மெட்ரோகோவை மாநகர மெட்ரோ 9 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்படும்; 8500 கோடியில் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம்2030க்குள் 33ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்திமாநில மின் உற்பத்தி 2030க்குள் 33 ஆயிரம் மெகாவாட்டாக உயரும்; பசுமை ஆற்றல் மின் உற்பத்தி சக்தியை 50 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கைபுதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி அதிகரிப்பு2030க்குள் 50 சதவீதத்திற்கு மேல் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின் உற்பத்தி பங்களிப்பு இருக்க சிறப்பு நிறுவனம் உருவாக்கம்மின்வாரிய இழப்பு குறைய வாய்ப்புமின்வாரிய இழப்பு 2021-22ல் ரூ.11951 கோடியில் இருந்து, நடப்பு ஆண்டில் ரூ.7822 கோடியாக குறைய வாய்ப்புசேலம் 880 கோடியில் 119 ஏக்கரில் ஐவுளி பூங்காமேற்கு மண்டலத்தில் சேலத்தில் ரூ.880 கோடியில் 119 ஏக்கரில் ஐவுளி பூங்கா ஒன்றிய அரசு உதவியுடன் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்ஜவுளி பூங்காக்கள் - 2 லட்சம் வேலைவாய்ப்புபுதிதாக அமையும் ஜவுளி பூங்காக்கள் மூலம் 2 லட்சம் வேலை வாய்ப்பு உருவாக்கம்MSMEக்களை கணக்கெடுக்க ரூ.5 கோடிகுறு,சிறு, நடுத்தர நிறுவனங்களை கண்டறிந்து பதிவு செய்ய அரசு முயற்சி மேற்கொள்ளும்; 5 கோடியில் கணக்கெடுப்பு பணிகள்பொருளாதார முதலீட்டு மாநாடு-ரூ.100 கோடி ஒதுக்கீடு2030க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக தமிழக பொருளாதார உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்தமிழகத்தில் உலக பொருளாதாரதார முதலீட்டு மாநாடுகளுக்காக 100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்219 ஒப்பந்தம்; 3,89,689 நபர்களுக்கு வேலை2022ஆம் ஆண்டு முதல் இதுவரை 3,89,689 நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் 219 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்EV உற்பத்தி-தமிழ்நாடு முதன்மை இடம்பசுமை மின்சார வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முதன்மை இடம்; கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனையான 46% மின் வாகனம் தமிழகத்தில் உற்பத்திமகளிர் வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கைபுதிதாக ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சியில் 32 ஆயிரம் பெண்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தோல் அல்லாத காலணி உருவாக்கும் தொழிற்சாலை மாநகராட்சிகளில் இலவச வை-ஃபைதமிழ்நாட்டில் அனைத்து மாநகராட்சிகளில் பொதுவெளியில் இலவச வை-ஃபை சேவை வழங்க நடவடிக்கை3 இடங்களில் மினி டைடல் பார்க்குகள்செங்கல்பட்டு, திருநெல்வேலி, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் தலா 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தொழில் நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும்மசூதிகள், தேவாலயங்கள் சீரமைப்புநாகூர் தர்காவை சீரமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு; சேலம், மதுரையில் தேவாலயங்களை சீரமைக்க நிதி ரூ.10 கோடியாக உயர்வு400 கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்படும்நடப்பு ஆண்டில் 574 கோயில்களில் திருப்பணி முடிந்து குடமுழுக்கு நடத்தப்பட்டது; வரும் ஆண்டில் 400 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்படும்3 கோயில்கள் ரூ.485 கோடியில் மேம்பாடுபழனி, திருத்தணி முருகன் கோயில்கள், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் ஆகியவை ரூ.485 கோடியில் மேம்படுத்தப்படும்எளிய பத்திரப்பதிவுக்கு புதிய மென்பொருள்நில நிர்வாகத்தில், நம்பகமான எளிய நில பதிவேற்று முறையை கொண்டு வர அரசு உறுதியாக உள்ளது; இதற்காக புதிய மென் பொருள் உருவாக்கப்படும்13491 போதைப்பொருள் விற்பனையாளர்கள் கைதுபோதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்க 13491 போதைப் பொருள் விற்பனையாளர் கைது; அவர்களின் வங்கி கணக்கு முடக்கம் .புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் - விளக்கம்புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த வதந்திகளை பரப்பியோர் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கைஅரசு பணியாளர் வீடுகட்ட முன்பணம் ரூ.50லட்சம்அரசு பணியாளர்கள் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், வழங்கப்படும் முன்பணம், ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக அதிகரிக்கப்படும்குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகைசெப்.15ல் ரூ.1000 உரிமைத் தொகை திட்டம் தொடக்கம்அண்ணா பிறந்தநாளில் மகளிர் ரூ.1000 உரிமைத்தொகை திட்டம்குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை திட்டம் குறித்து அறிவிப்புவரும் நிதியாண்டில் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும்பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்.15 முதல் மகளிருக்கான ரூ.1000 உரிமைத் தொகை திட்டம் அமல்

மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க மாநில அளவிலான குழு அமைப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க மாநில அளவிலான குழு அமைப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Apr 05, 2022

2098

தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க சான்றோர்கள், வல்லுனர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை போல உயர்மட்டக்குழு அமைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அக்குழுவின் தலைவராக டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் நியமிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.உலக சதுரங்க சாம்பியன் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 12 பேர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இக்குழு புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்து ஓராண்டிற்குள் அரசுக்கு பரிந்துரையை வழங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநில அரசின் கடன் சுமை அதிகரிப்பது கவலை அளிக்கிறது - பாமக நிறுவனர் ராமதாஸ்

மாநில அரசின் கடன் சுமை அதிகரிப்பது கவலை அளிக்கிறது - பாமக நிறுவனர் ராமதாஸ்

Mar 18, 2022

1892

தமிழக பட்ஜெட்டில் கல்விக்கான திட்டங்களை வரவேற்றுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், அதிகரிக்கும் கடன்சுமை கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.அவர் தனது அறிக்கையில், பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறைக்கு அறிவித்துள்ள சில திட்டங்கள் வரவேற்கத் தக்கவை எனத் தெரிவித்துள்ளார். ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு நிதி மற்றும் தங்கம் வழங்கும் திட்டத்தை ரத்து செய்தது ஏற்கத் தக்கதல்ல எனத் தெரிவித்துள்ளார்.நலவாழ்வுத்துறை ஒதுக்கீடு, பொது வழங்கல் திட்டத்துக்கான மானியம் ஆகியன குறைக்கப்பட்டிருப்பது மக்களைப் பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளார். 

தமிழக பட்ஜெட் - வரவும் செலவும்..!

தமிழக பட்ஜெட் - வரவும் செலவும்..!

Mar 18, 2022

2308

தமிழ்நாடு அரசின் 2 இலட்சத்து 84 ஆயிரத்து 188 கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்டில் அரசுக்குப் பலவகைகளில் கிடைக்கும் வருவாய், பல துறைகளின் செலவுக்கான நிதி ஒதுக்கீடு ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன.வணிக வரிகள் மூலம் ஒரு இலட்சத்து ஆறாயிரத்து 765 கோடி ரூபாயும்,மாநில ஆயத்தீர்வைகள் மூலம் பத்தாயிரத்து 589 கோடி ரூபாயும் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.முத்திரைத்தாள் மற்றும் பத்திரப் பதிவுக் கட்டணங்கள் 16 ஆயிரத்து 322 கோடி ரூபாயும், மோட்டார் வாகனங்கள் மீதான வரி 7149 கோடி ரூபாயும் கிடைக்கும். இவற்றில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ஒரு இலட்சத்து 42 ஆயிரத்து 800 கோடி ரூபாயும், சொந்த வரியல்லாத வருவாய் 15 ஆயிரத்து 537 கோடி ரூபாயும் ஆகும்.மத்திய வரிகளில் தமிழ்நாட்டின் பங்கீடு 33 ஆயிரத்து 311 கோடி ரூபாய் ஆகும். சரக்கு சேவை வரி இழப்பீட்டுக்கான உதவி மானியம் 39 ஆயிரத்து 759 கோடி ரூபாய் ஆகும். ஒட்டுமொத்த வருவாய் வரவினங்கள் 2 இலட்சத்து 31 ஆயிரத்து 407 கோடி ரூபாய் ஆகும்.தமிழ்வளர்ச்சித் துறைக்கு 83 கோடி ரூபாயும்,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைக்கு 7475 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. காவல்துறைக்கு 10,285 கோடி ரூபாயும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு 496 கோடி ரூபாயும், நீதி நிர்வாகத் துறைக்கு 1462 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு மொத்தம் 13 ஆயிரத்து 176 கோடி ரூபாயும், நீர்வளத்துறைக்கு 7338 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.கால்நடைப் பராமரிப்புத் துறைக்கு 1315 கோடி ரூபாயும், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறைக்கு 849 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறைக்கு 36 ஆயிரத்து 896 கோடி ரூபாயும், உயர்கல்வித்துறைக்கு 5,669 கோடி ரூபாயும், நான் முதல்வன் திட்டத்துக்கு 50 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு 293 கோடி ரூபாயும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 17 ஆயிரத்து 901 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு 5922 கோடி ரூபாயும், ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறைக்கு 4281 கோடி ரூபாயும், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறைக்கு 1230 கோடி ரூபாயும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கு 838 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.ஊரக வளர்ச்சித் துறைக்கு 26 ஆயிரத்து 647 கோடி ரூபாயும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 20,400 கோடி ரூபாயும், வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு 8737 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறைக்கு 18 ஆயிரத்து 219 கோடி ரூபாயும், போக்குவரத்துத் துறைக்கு 5375 கோடி ரூபாயும் எரியாற்றல் துறைக்கு 19 ஆயிரத்து 297 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.தொழிலாளர் நலத்துறைக்கு 2354 கோடி ரூபாயும், சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கு 911 கோடி ரூபாயும்,தொழில்துறைக்கு 3268 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பவியல் துறைக்கு 199 கோடி ரூபாயும், சுற்றுலாத் துறைக்கு 246 கோடி ரூபாயும், இந்து அறநிலையத் துறைக்கு 341 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.ஒட்டுமொத்தச் செலவினங்கள் 2 இலட்சத்து 84 ஆயிரத்து 188 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதால் வருவாய்ப் பற்றாக்குறை 52 ஆயிரத்து 781 கோடி ரூபாயாக உள்ளது.

தமிழக பட்ஜெட்டில் ஒரு ரூபாயை அடிப்படையாகக் கொண்டு வரவு மற்றும் செலவு

தமிழக பட்ஜெட்டில் ஒரு ரூபாயை அடிப்படையாகக் கொண்டு வரவு மற்றும் செலவு

Mar 18, 2022

4691

ஒரு ரூபாயை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தின் நிதி வரவு மற்றும் செலவை பார்க்கலாம்.மாநிலத்தின் வருவாய் ஒரு ரூபாய் எனக் கொண்டால் அதில்,மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் 40 காசுகளும்,மாநிலத்தின் சொந்த வரியல்லாத வருவாயில் 4 காசுகளும் கிடைக்கின்றன.கடன்பத்திரங்கள் உள்ளிட்ட பொதுக்கடன் மூலம் 34 காசுகள் கிடைக்கிறது. கடனைத் திரும்பப் பெறுவதால் 2 காசுகள் கிடைக்கின்றன. மத்திய அரசின் மானியம் 11 காசுகளும், மத்திய வரிகளில் மாநிலத்தின் பங்காக 9 காசுகளும் கிடைக்கிறது. 

தமிழக பட்ஜெட் 2022 - 2023 தாக்கல்..!

தமிழக பட்ஜெட் 2022 - 2023 தாக்கல்..!

Mar 18, 2022

8789

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் தமிழ்நாடு அரசின் 2022-2023ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல்நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை வாசித்து வருகிறார்அதிமுக எம்எல்ஏக்களின் அமளிக்கு இடையே தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல்இக்கட்டான சூழலில் ஆட்சி பொறுப்பேற்றாலும், தொலைநோக்கு திட்டங்களை வகுத்துள்ளோம்கடந்தாண்டு இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் இடம்பெற்றனகொரோனா பெருந்தொற்றின் 2ஆவது மற்றும் 3ஆவது அலை மிகச்சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டதுகொரோனா காலத்தில் நிதிச்சுமை அதிகமாக இருந்தபோதும் நிதி நிர்வாகத்தால் திறம்பட சமாளித்தோம்பட்ஜெட் தாக்கலின்போது அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் பேரவையிலிருந்து வெளிநடப்புதமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை அச்சுறுத்தலாக இருந்த நிலையில், தற்போது அது மாற்றப்பட்டுள்ளதுதீர்க்கமான நடவடிக்கையால் அரசின் வருவாய் பற்றாக்குறை, 4.16%லிருந்து, 3.08%ஆக குறைய உள்ளதுதிராவிட இயக்கம் சமூகநீதிக்கான போராட்டத்தில் வெற்றி பெற்றாலும், அது இன்னும் முழுமையாக முடியவில்லைதாமிரபரணி படுகையில் கண்டறியப்பட்ட தொல்பொருட்கள் 3,200 ஆண்டுகள் பழமையானதாகும்தாமிரபரணி ஆற்றுப் படுகை தொல்பொருட்கள் மூலம், தமிழர் தம் வரலாறு மீண்டும் உறுதியாகியுள்ளதுவரும் நிதியாண்டு பொருளாதார நிச்சயமற்ற தன்மையுடன் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.7000 கோடி குறைகிறதுஉக்ரைன்-ரஷ்யா போரால் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியிலும் பாதிப்பு ஏற்படக் கூடும்சமூக நலத்திட்டங்கள் அனைத்தும் வழக்கம்போல் எந்த தடைகளும் இன்றி செயல்படுத்தப்படும்அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது"முதல்வரின் முகவரி" என்ற புதிய துறையின் மூலம் 10.01 லட்சம் மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளதுஜிஎஸ்டி வரி நடைமுறை மூலம், மாநில அரசின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுஜிஎஸ்டி வரி நடைமுறை மூலம், தமிழ்நாடு அரசு ரூ.20,000 கோடி இழப்பினை எதிர்கொள்ள நேரிடும்தமிழ் மொழியின் தொன்மையையும், செம்மையையும் போற்றிட, பிற மொழிகளோடு ஒப்பிட்டு ஆய்வு செய்ய நடவடிக்கைதமிழ் வேர் சொற்களை முன்னிலைப்படுத்தி, தமிழ் மொழி வளத்தின் புகழ்பரப்ப மொழி வல்லுநர்கள் குழு அமைக்கப்படும்"அகரமுதலி" திட்டத்தின் கீழ் தமிழ் மொழியின் வேர்சொற்களை கண்டறியும் ஆய்வு பணி நடைபெறும்தாய்மொழி கல்வியே சிறந்த கல்விமுறை என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதுஅரசு சாரா பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்தனியார் பள்ளிகளில், தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு 1 முதல் 10 வகுப்பு வரை இலவச பாடப் புத்தகங்கள்விழுப்புரம், இராமநாதபுரம் மாவட்டங்களில் ரூ.10 கோடியில் புதிதாக அருங்காட்சியகம் அமைக்கப்படும்அரசு நிலங்களை பராமரிக்க சிறப்பு நிதியாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுநவீன நுட்பத்தில் நிலங்களை அளவீடும் செய்யும் வகையில், ரோவர் எந்திரங்களை வாங்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடுதமிழ்வழிக்கல்வியை ஊக்குவிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்சென்னையில் வெள்ளத் தடுப்பு பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுபேரிடர் மேலாண்மைத்துறை ரூ.7,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுசமூக ஊடகங்களில் குற்றச்செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதுசமூக ஊடகங்களில் தவறான பதிவுகளை தடுக்க, சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும்காவல்துறைக்கு ரூ.10,285 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்வானிலையை நவீன நுட்பத்துடன் துல்லியமாக கணிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடுசுய உதவிக்குழுக்களுக்கும், விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ.4130 கோடி ஒதுக்கீடுநீர்வளங்களின் பயன்பாட்டை அதிகரிக்க, ரூ.3,384 கோடி நிதி ஒதுக்கீடுசென்னை அருகே தாவரவியல் பூங்கா ரூ.300 கோடியில் அமைக்கப்படும்சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா ரூ.20 கோடியில் மேம்படுத்தப்படும்கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ.1315 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்த ரூ.849.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் முன்மாதிரி பள்ளிகள் அமைக்க நடவடிக்கைகல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் முன்மாதிரி பள்ளிகள் அமைக்க ரூ.125 கோடி ஒதுக்கீடுநான் முதல்வன் திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு"நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் மாணவர்களின் திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு"நான் முதல்வன்" திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 5 லட்சம் மாணவர்களின் திறனை மேம்படுத்த நடவடிக்கை"பிரசித்தி பெற்ற பல்கலையில் சேர ஊக்குவிப்பு"புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து ஊக்குவிக்கப்படும்"தமிழ்நாடு ஒலிம்பிக் பதக்கம் தேடல் திட்டம்"தமிழ்நாடு ஒலிம்பிக் பதக்கம் தேடல் திட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்"6 மாவட்டங்களில் ரூ.36 கோடியில் நூலகங்கள்"புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களில் 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட மைய நூலகங்கள் அமைக்கப்படும்"150 நாடுகளைச் சேர்ந்த 2000 வீரர்கள் பங்கேற்பு"இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு விரிவான ஏற்பாடுகள்சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 150 நாடுகளைச் சேர்ந்த 2000 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்மகப்பேறு உதவி திட்டத்திற்கு ரூ.817 கோடிடாக்டர் முத்துலட்சுமி அம்மையார் மகப்பேறு திட்டத்திற்கு ரூ.817 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் "உக்ரைன் ரிட்டர்ன் தமிழக மாணவர்களுக்கு உதவி"உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பியுள்ள தமிழக மாணவர்களின் கல்விக்காக அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும்"அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000"அரசு பள்ளி மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்கு, மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும்காஞ்சி புற்றுநோய் மருத்துவமனை மேம்படுத்தப்படும்காஞ்சிபுரத்தில் அரசு அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை, உயர்தர மருத்துவமனையாக மேம்படுத்தப்படும்சத்துணவு திட்டத்திற்கு ரூ.1949 கோடிதமிழ்நாடு அரசின் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1949 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்செங்கல்பட்டு: சமூக மேம்பாட்டு மையம்செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் ரூ.25 கோடியில் சமூக மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்பழங்குடியினருக்கு 1000 புதிய வீடுகள்விளிம்பு நிலையில் உள்ள பழங்குடியினருக்கு(ST), 1000 புதிய வீடுகள், ரூ.50 கோடியில் கட்டித்தரப்படும்பி.சி, எம்.பி.சி மாணவர்களுக்கு நிதி ஒதுக்கீடுபிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் உயர்கல்விக்கு ரூ.320 கோடி ஒதுக்கீடுவழிபாட்டு தலங்கள் புனரமைக்க நிதிதொன்மையான, சிறுபான்மையினர் வழிபாட்டுத் தலங்களை புனரமைப்புக்கு ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடுஊரக சுகாதாரத் திட்டத்திற்கு ரூ.1906 கோடிதமிழ்நாட்டில், தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்திற்கு ரூ.1906 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்மாணவர்கள் விடுதிகளை மேம்படுத்த சிறப்பு குழுமாணவர்கள் விடுதிகளை மேம்படுத்த சிறப்பு குழு அமைக்கப்படும்நூலகங்கள் மேம்பாடு - உயர்மட்டக்குழு அமைப்புதமிழ்நாட்டில் உள்ள நூலகங்களை மேம்படுத்த உயர்மட்டக் குழு அமைக்கப்படும்மானிய விலையில் வீடு கட்டித்தரும் திட்டம்மானிய விலையில் வீடு கட்டித்தரும் திட்டத்திற்கு ரூ.4848 கோடி நிதி ஒதுக்கீடுஎம்எல்ஏ தொகுதி மேம்பாடு - ரூ.705 கோடிசட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டங்களுக்கு ரூ.705 கோடி ஒதுக்கீடுஅம்ரூத் 2.0 திட்டத்திற்கு ரூ.2030 கோடி ஒதுக்கீடுநகர்ப்புற மேம்பாட்டுத் திட்டமான அம்ரூத் 2.0 திட்டத்திற்கு ரூ.2030 கோடி நிதி ஒதுக்கீடுநகரங்களில் 500 புதிய பசுமை பூங்காக்கள்நகர்ப்புறப் பகுதிகளைப் பசுமையாக்கும் வகையில் 500 புதிய பூங்காக்கள் உருவாக்கப்படும்புதிய 6 மாநகராட்சிகளுக்கு ரூ.60 கோடிபுதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட 6 மாநகராட்சிகளில் அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களுக்கு ரூ.60 கோடி ஒதுக்கீடு6 புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள்தமிழ்நாட்டில் 6 புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும்உதகை சிறப்பு திட்டங்களுக்கு ரூ.10 கோடிநீலகிரி மாவட்டம் உதகை நகரில் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கீடுஅ.ம.தி-2க்கு ரூ.1455 கோடி ஒதுக்கீடுஅண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2க்கு ரூ.1455 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2, 2657 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும்பறக்கும் சாலை திட்டம் செயல்படுத்தப்படும்சென்னை துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்ட சாலை திட்டத்தை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக உள்ளதுசென்னை துறைமுகம்-மதுரவாயல் உயர்மட்ட சாலை திட்டத்திற்கு ரூ.5770 கோடி நிதி ஒதுக்கீடுகாட்டுப்பாக்கம் சந்திப்பில் ரூ.322 கோடியில் மேம்பாலம்சென்னையை அடுத்த காட்டுப்பாக்கம் சந்திப்பில் ரூ.322 கோடி மதிப்பில் புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்நெடுஞ்சாலைதுறைக்கு ரூ.18,218 கோடி ஒதுக்கீடுநெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைக்கு ரூ.18,218 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்500 மின்சார பேருந்துகள் கொள்வனவு.!தமிழ்நாட்டில், சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயக்குவதற்காக, 500 புதிய மின்சார பேருந்துகள் வாங்கப்படும்ரூ.5375 கோடியில் பேருந்துகள் நவீன மயம்.!மின்சார பேருந்துகள் வாங்கவும், பேருந்துகள் நவீன மயமாக்கலுக்காகவும் ரூ.5375 கோடி நிதி ஒதுக்கீடு2213 புதிய பேருந்துகள் வாங்கப்படும்500 மின்சார பேருந்துகள் நீங்கலாக, 2,213 புதிய டீசல் பேருந்துகள் வாங்கப்படும்ஐடிஐ & பாலிடெக்னிக் மேம்பாடு: ரூ.2877 கோடிதமிழ்நாட்டில் ஐடிஐ, பாலிடெக்னிக் உள்ளிட்ட 761 தொழிற்பயிற்சி நிறுவனங்களை மேம்படுத்த ரூ.2877 கோடியில் சிறப்புத் திட்டம்MSME மூலதன முதலீட்டுக்கு ரூ.300 கோடிதமிழ்நாட்டின் சிறு, குறு, தொழில் நலத்துறையின் மூலதன முதலீட்டிற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு5 மாவட்டங்களில் புதிய தொழிற்பூங்காக்கள்தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்புகோயம்புத்தூர், வேலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும்புதிய தொழிற்பூங்காக்கள் மூலம், ரூ.50,000 கோடி அளவிற்கு முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்ஏற்றுமதி நிறுவன கட்டமைப்பு: ரூ.100 கோடிஏற்றுமதி நிறுவனக் கட்டமைப்பை உருவாக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடுபழம்பெரும் கோவில்களை புனரமைக்க ரூ.100 கோடி1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோவில்களை புனரமைக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடுமீஞ்சூர்-வண்டலூர் ரிங் ரோடு "டெவலப்மெண்ட் காரிடர்"மீஞ்சூர் - வண்டலூர் இடையிலான வெளிவட்டச் சாலை டெவலப்மெண்ட் காரிடராக மேம்படுத்தப்படும்அறநிலையத்துறைக்கு ரூ.340.80 கோடி ஒதுக்கீடுஇந்து சமய அறநிலையத்துறையின் மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.340.80 கோடி ஒதுக்கீடுதொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடம்இந்தியாவிலேயே தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில், தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது - நிதியமைச்சர்தீயணைப்புத்துறைக்கு ரூ.496 கோடி ஒதுக்கீடுதீயணைப்புத்துறை மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ரூ.496 கோடி ஒதுக்கீடுஓய்வூதிய திட்டங்களுக்கு ரூ.4,816 கோடி ஒதுக்கீடுசமூக பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.4,816 கோடி ஒதுக்கீடுநீதி நிர்வாகத்துறைக்கு ரூ.1,461 கோடி ஒதுக்கீடுநீதி நிர்வாகத்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.1,461 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுவட்டியில்லா பயிர்க்கடன் வழங்க நிதிவிவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கும் திட்டத்திற்கு ரூ.200கோடி ஒதுக்கீடுஅணைகளை புனரமைக்க நிதி ஒதுக்கீடுதமிழகத்திலுள்ள 64 அணைகளை புனரமைக்க ரூ.3,384 கோடி ஒதுக்கீடுடெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதி வரை தூர்வாரும் பணிகளுக்காக ரூ.80கோடி ஒதுக்கீடுவள்ளலார் பல்லுயிர் காப்பகம் அமைப்புவள்ளலார் பல்லுயிர் காப்பக திட்டத்திற்கு ரூ.20கோடி ஒதுக்கீடுவரையாடுகளை பாதுகாக்க சிறப்பு திட்டம்வனப்பகுதிகளில் வரையாடுகளை பாதுகாக்கும் சிறப்பு திட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ.10கோடி ஒதுக்கீடுஅரசுப்பள்ளிகள் நவீனப்படுத்தப்படும்ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் அரசுப்பள்ளிகள் நவீனப்படுத்தப்படும்அரசுப்பள்ளிகளை நவீனமயமாக்க, பேராசிரியர் அன்பழகன் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்அரசுக் கல்லூரிகளின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.250கோடி ஒதுக்கீடு செய்யப்படும்அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்புஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி ஆய்வகங்களுடன் ரூ.7ஆயிரம் கோடி செலவில் அரசுப்பள்ளிகள் மேம்படுத்தப்படும்பள்ளிக்கல்வித்துறை - ரூ.36,000 கோடிபள்ளிக்கல்வித்துறைக்கு வரும் நிதியாண்டில் ரூ.36,000 கோடி ஒதுக்கீடுபொது விநியோக திட்டத்திற்கு ரூ.7,500கோடிபொது விநியோக திட்டத்தின் கீழ் உணவு மானியமாக ரூ.7,500கோடி ஒதுக்கீடுமருத்துவமனைகளை தரம் உயர்த்த ரூ.1,019 கோடிமக்கள் நல்வாழ்வுத்துறை - ரூ.17,901 கோடி19 மாவட்டங்களிலுள்ள மருத்துவமனைகளை தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்த ரூ.1,019 கோடி ஒதுக்கீடுமருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.17,901 கோடி ஒதுக்கீடுசென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தை மேம்படுத்த ரூ.40கோடி ஒதுக்கீடுமுதலமைச்சர் காப்பீடு திட்டம் - ரூ.1,547கோடிமுதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு ரூ.1,547கோடிஉயர்கல்வி உறுதி திட்டத்திற்கு நிதிமூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்திற்கு ரூ.698 கோடி ஒதுக்கீடுகுழந்தை வளர்ப்பு திட்டம் - ரூ.2,542கோடிஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்பு திட்டத்திற்கு ரூ.2,542கோடி ஒதுக்கீடுஇலவச சைக்கிள் வழங்க ரூ.162கோடிபள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.162கோடி ஒதுக்கீடுமாற்றுத்திறனாளிகள் நலத்துறை - ரூ.808கோடிமாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.808கோடி ஒதுக்கீடுகடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு ரூ.450 கோடி ஒதுக்கீடுசமத்துவபுரங்கள் மேம்படுத்த ரூ.190கோடிதமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள 149 சமத்துவபுரங்கள் ரூ.190கோடி மதிப்பில் சீரமைக்கப்படும்முதற்கட்டமாக 149 சமத்துவபுரங்கள் ரூ.190கோடி செலவில் சீரமைக்கப்படும்ஊரக வேலைவாய்ப்பு திட்டம் - ரூ.2,800கோடிதேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.2,800 கோடி ஒதுக்கீடுசிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500கோடிசென்னையை மேம்படுத்தும் சிங்கார சென்னை 2.0திட்டத்திற்கு ரூ.500கோடிகுடிநீர் இணைப்பு - ரூ.3,000கோடிகுடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்திற்கு ரூ.3,000 கோடி ஒதுக்கீடுகலைஞர் நகர்ப்புற மேம்பாடு - ரூ.1,000கோடிகலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.1,000 கோடி ஒதுக்கீடுமாநகராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடுகரூர், கடலூர், சிவகாசி மாநகராட்சிகளின் மேம்பாட்டிற்கு தலா ரூ.10கோடி ஒதுக்கீடுபிரதமர் வீடு திட்டம் - ரூ.3,700கோடிபிரதமர் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3,700கோடி ஒதுக்கீடுஇ.சி.ஆரில் 6 வழிச்சாலைக்கு ரூ.135கோடிசென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.135கோடி மதிப்பில் ஆறுவழிச்சாலை அமைக்கப்படும்தரைப்பாலங்கள் மேம்படுத்தப்படும்தரைப்பாலங்களை உயர்மட்ட பாலங்களாக மாற்ற ரூ.1,000 கோடி ஒதுக்கீடுமகளிர் இலவச பேருந்து திட்டம் - ரூ.1,520கோடிமகளிருக்கான இலவச பேருந்து திட்டத்திற்கு ரூ.1,520கோடி போக்குவரத்துத்துறைக்கு மானியமாக ஒதுக்கீடுமாணவர்களுக்கான இலவச பஸ்பாஸ் திட்டத்திற்கு மானியமாக ரூ.928கோடி ஒதுக்கிடுமின் பகிர்மான இழப்பீட்டை ஈடு செய்ய நிதிதமிழ்நாடு மின் பகிர்மான கழக இழப்பீடுகளை ஈடு செய்ய ரூ.13,108கோடி ஒதுக்கீடுநுகர்வோர் மின்கட்டண மானியத்திற்கு ரூ.9,379கோடி ஒதுக்கீடுமின்கட்டண மானியமாக ரூ.9,379கோடியை அரசு வழங்கும் என பட்ஜெட்டில் அறிவிப்புசென்னையில் புத்தொழில் மையம்சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.75கோடி செலவில் மாநில புத்தொழில் மையம் அமைக்கப்படும்கோவையில் கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம்கோவையில் கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் அமைக்கப்படும்தொழில்நுட்ப மையம் அமைப்புசென்னையில் ரூ.54.61கோடி மதிப்பில் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும்சுற்றுலாத்துறைக்கு ரூ.246கோடி ஒதுக்கீடுதமிழகத்தில் சுற்றுலாத்துறை மேம்படுத்த ரூ.246கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடுதஞ்சாவூர், காஞ்சிபுரம், திருச்சி, ராமநாதபுரம் மாவடங்களில் தொகுப்பு சுற்றுலா பயணங்கள் திட்டம் செயல்படுத்தப்படும்தனியார் பங்களிப்புடன் தொகுப்பு சுற்றுலா பயணங்கள் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்புவீட்டுவசதித்துறைக்கு ரூ.8,700 கோடிதமிழக வீட்டுவசதித்துறைக்கு ரூ.8,700கோடி ஒதுக்கீடுஅகவிலைப்படி, ஓய்வூதியத்திற்கு நிதி ஒதுக்கீடுஅரசு ஊழியர்களுக்கான உயர்த்தப்பட்ட அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியத்திற்காக ரூ.19,000கோடி ஒதுக்கீடுசொத்து மேலாண்மை மென்பொருள் உருவாக்கம்அரசுத்துறைகளின் அசையும் மற்றும் அசையா சொத்து விபரங்களை கண்காணிக்க, சொத்து மேலாண்மை மென்பொருள் உருவாக்கப்படும்கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.79கோடிகொரோனா பாதித்து உயிரிழந்த முன்களப் பணியாளர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க ரூ.79கோடி ஒதுக்கீடுநீர்ப்பாசன திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகாவிரி நீர் வடிநிலப்பகுதிகளை சீரமைக்க ரூ.3,384கோடி நிதி ஒதுக்கீடுஏரிகள், ஆறுகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகள் மூலம் நிலத்தடி நீரை சேமிக்க ரூ.2,787கோடி ஒதுக்கீடுடெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதி வரை தூர்வாரும் பணிகளுக்காக ரூ.80கோடி ஒதுக்கீடுஊழல் தடுப்பு துறை மேம்படுத்தப்படும்ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இதுவரை இல்லாத அளவுக்கு மேம்படுத்தப்படும்நேர்மையான ஆட்சி வழங்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பை நடைமுறைப்படுத்த மேம்படுத்தப்படும் விரைவில் மகளிர் உரிமைத்தொகை திட்டம்மகளிருக்கான உரிமைத்தொகை திட்டத்தின் தகுதியான பயனாளிகளை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறதுநிதிநிலையில் முன்னேற்றம் ஏற்படும் பொழுது மகளிருக்கான உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படும்பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்கான தரவுகள் சேமிக்கப்படுகின்றன - நிதியமைச்சர்தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு, 21 இந்திய, உலக மொழிகளில் அச்சு மற்றும்  மின்னூல் பதிப்புகளாக வெளியிடப்படும்

2022-2023-ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட், சட்டசபையில் இன்று தாக்கல்.!

2022-2023-ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட், சட்டசபையில் இன்று தாக்கல்.!

Mar 18, 2022

1863

2022-2023-ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட், சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. சட்டசபைத் தேர்தல் முடிந்தபின், மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த ஆகஸ்டு 13-ந்தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்த நிலையில், 2022-23-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவிருக்கிறார்.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முழுமையாக தாக்கல் செய்யப்படும் முதலாவது பட்ஜெட் இதுவாகும். இடைக்கால பட்ஜெட்டை போலவே இதுவும் காகிதம் இல்லா பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்படுகிறது.பட்ஜெட் கூட்டம் முடிந்ததும், சபாநாயகர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாள் நடத்துவது? என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.வேளாண் பட்ஜெட்டை அந்தத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நாளை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க. ஆட்சியில்தான் வேளாண்மைக்கு என தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.திங்கட்கிழமை பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கும் எனவும், இந்த விவாதம் 3 நாள்கள் நடைபெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

BIG STORIES

குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுக்குறீங்களா..?!  முதல்ல இத பாருங்க மேடம்..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News